எனக்கும் என் அப்பாவுக்கும் நிறைய உரையாடல்கள் நடக்கும். அதில் சில இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

சந்தானம் : ஆமா இன்னும் நீ காலேஜ்ல கைநாட்ட வெக்குற ?

ரேகா : என்ன கைநாட்டு ?

சந்தானம் : அதான் காலைல ஓடி பரபரன்னு வைப்பிங்கலே ?

ரேகா : ஐயோ ராமா!! அது Biometric நானா (அப்பா).
லமுறை இயற்கையின் பிரமாண்டமான மலை, கடலின்  முன் பிரம்மிப்போடு  நிக்கும்போது ஒரு சொடுக்கில அப்படியே கலந்துட நினைசத்துண்டு. ஆனா, இங்க நிக்கும்போது ஒரு விதமான ஆற்றாமையும்  பயமுமே இருந்தது.

டிசம்பர்.. 1964.. புயல்.. பாம்பன்.. ரயில்..நாம படிச்சது கேட்டது நிறைய..

இது இன்னதுனு தெரிஞ்சுக்க  மிச்சங்களை  விட்டு சென்றுள்ளது அந்த இராட்சத அலைகள்.

 நம்பிக்கைகள் நிறைந்த மருத்துவமனையாம்..பிரார்த்தனைகள் அறிந்த தேவாலயமாம்..

 
தேவாலயத்தின் முகப்பாம்..
  
 
 கனவுகளையும் பிரிவுகளையும் தெரிந்த இரயில்நிலயமாம்..


கேள்விகளையும் பதிலுக்கான தேடல்களுடன் இருந்த பள்ளியாம்..

அங்க மீன்களை காயவெச்சுட்டு இருந்தவர் கிட்ட  பேசினப்ப அவர் சொன்னது:  கிடைக்குற  மீனெல்லாம் பிரெஷா பாம்பன் - தனுஷ்கோடி ரயில்ல அனுப்பிட்டு இருந்ததால,  நல்ல வருமானம்  கிடைச்சுதாம். ஆனா இப்போ போக்குவரத்து வசதி சரியா இல்லாததால கருவாடு போட்டு தான் அனுப்ப முடியுமுனு சொன்னங்க. அதனாலயே அவங்க வாழ்க்கை தரம் சறுக்கியதாகவும் சொல்லிட்டே அவர் மீன்களை காயவைக்க போயிட்டார்.  #அந்த ஒரு இரவு விடியவேயில்லை இவங்களுக்கு..


 பீனிக்ஸ் பறவையை உருவாகின மனுஷனுக்கா மிச்சங்கல்ல இருந்து  வாழ சொல்லிக்கொடுக்கனு..  


வெயில் காலங்களில் மட்டுமே கோடி வரை ஜீப் சவாரி  இருக்கும். மழைக்காலத்துல சகதியா இருக்கும்னு ஜீப் போறது இல்லை. நாங்க டிசம்பர்ல  போனதனால கோடி வரை நடந்தே போனோம்.  

     ஆள் ஆரவாரமற்ற நிசப்தத்தில்  ஊடுருவும் அலைகளின் மிரட்டும் ஓசை..


 நமக்கு முன்பாக ஓடும் நண்டு..

#மற்ற எல்லா விவரங்களும் நம்ம கூகிள் அண்ணே கிட்ட இருக்கு

- ரேகா S நமச்சிவாயம்