ஊட்டி மலை மேலே.. ஒரு நாள்..

1.சுவைக்க ப்ரெஷ் காரட்..

 பூமிக்கடியில்  விளையற  காரட், முள்ளங்கி, போன்ற  காய்கறிகளை அப்பவே அறுவடை செஞ்சு  ப்ரெஷா விற்பாங்க. காரட்டின் சுவையே சுவை தான்.. நறு நறுன்னு  சுவையா இருக்கும். அதனின் பளீச் நிறம் புத்துணர்ச்சி தரும்.  #நம்மூரில் கிடைக்காதுங்க.

 


2.  மலைவாழ் மக்களின் அவசரமில்லாத வாழ்கையை  கண்டுரசிக்க .. 

 போற வழியில் அங்க அங்க நிறுத்தி கொஞ்ச நேரம் அமர்ந்து அவர்களின் அவசரமில்லாத வாழ்கையை ரசிக்கலாம். அவங்க  எல்லாருமே  பரிச்சயமானவர்களாக இருக்குறதும்  நின்னு  பேச நேரம் இருக்குறதையும் பார்த்தா ஆச்சரியமா தான் இருக்கு. நான் அவங்களை பார்க்குறது தெரிஞ்சதும் அவர்களின் வரவேற்கும் சிரிப்பு. #எப்படி இப்படி!

குழந்தைக்கு சாப்பாடு ஊட்றாங்க ஒரு அம்மா.. 


 மொட்டை மாடியில தான் வண்டிய நிறுத்துறாங்க இவங்க ..

 3. கலந்து உரையாட ஒரு அந்நிய நண்பர் :)

திரு. சுப்ரமணியன் கிட்ட பேசிய கொஞ்ச நேரத்திலயே அவர் வீட்டுக்கு கூப்பிட்டார், அவங்க ஊர் கோயில அமாவாசையன்று  நடக்கும்  திருவிழாவுக்கு  வர கூப்பிட்டார். பஞ்சக்காலத்தில அவங்க  தாத்தா இங்க வந்து குடியேறியதும், அவர்களின் வாழ்கை முறையும் சொல்லி கொண்டு  இருந்தார்.  #சொந்தகாரன்யே கூப்புடுறது இல்லையாம்


    நமசிவாயமும் , திரு. சுப்ரமணியன் அவர்களும்.. மிகவும் எளிமையான மனிதர் .. 

  மஞ்ச கலர் பெயிண்ட் அடிச்ச ஒரு  வீட்ல தான் அவர் குடி இருக்காராம்.. (Idea, You definitely screwed the beauty)

4. வாங்கி விட்டீர்களா Crown bakery biscuits!!

  ஊட்டி டீ தூள், ஹோம் சாக்லேட் போல, கூன்னூர் Crown  bakery biscuits பிரபலம்.  ஊட்டிக்கு போகும்போது எங்க பிளான்ல கண்டிப்பா இங்க கிடைக்கும் கூகீஸ் (Cookies) வாங்கறதும் ஒன்னு.. #செம்மா taste டா

 

5. ஊட்டி காய்கறி மார்க்கெட்..

 இரண்டாவது நாள் காலை, மார்கெட்டுக்கு மலை பூண்டு, கிளை கோஸ் வாங்க போனோம். அங்க ப்ரெஷ் காய்கறிகள பார்த்ததும் அல்லாடிய மனசை சாந்தபடுத்தி .. இரண்டு நாளுக்கு தேவையான காய்கறிகள வாங்கினோம். வீட்டுக்கு வந்ததும் தெரிஞ்சவங்களுக்கு கொடுத்தோம். #அப்ப ப்ரெஷ் னா என்னடா 

                                                                   கிளை கோஸ்


                                                      வேப்பிலை கூட விக்குறாங்க

 
 

 6. இயற்கையோடு ஒத்து வாழ ..

இவங்க கடைல உபயோக படுத்தப்பட்ட பாட்டில்களை  சிட்டுக்குருவி கூடு கட்ட பயன்படுத்தறாங்க. #என்ன ஒரு ஐடியா பாஸ்.

- ரேகா S நமசிவாயம்

1 comments:

raja said...

It is not kilaicose, ilai(leaf) cose