பால் பை

இன்று பால்கார செல்வி அக்காவ எதேச்சையா  பாத்தேன்.. அப்படியே இருக்காங்க.. இருவது வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரி..

மனசுக்கு மட்டும் நினைச்ச நேரத்துலே எண்ணங்கள் விரும்பிய காலகட்டத்துக்கு போக முடியாம இருந்து இருந்தா,  அஷ்டமாசித்தி மேல எனக்கு நம்பிக்கையே இருக்காது.

.... .. ..

அம்மாடி.. ஓடிய.. ஓடியா.. பால் கிண்ணம் எடுத்துட்டு வா.. இன்னைக்கு லட்சுமி குட்டி(கன்னு) போடா போறா.. சீக்கிரம் போகணும்..

பக்கத்து வீட்டு மகேஷம்மா, எதிர் வீட்டு ஆன்ட்டி, இப்படி எல்லாரையும் காலை அவசரத்துலயும் கூப்பிட்டு பேச இந்த செல்வியால மட்டும் தான் முடியும்.

அவங்க தொழுவத்துல நடக்குற அத்தனை விஷயமும் எனக்கு அத்துப்படி. லட்சுமி குட்டி போட்டுச்சா? எப்படி போட்டுச்சு? என்ன கலர்? அது அம்மா மாதிரியா  அப்பா மாதிரியா? என்ன பேரு? கேர்ளா பாயா? எப்படி கண்டுபுடிக்குறது? இப்படி எத்தனை கேள்வி கேட்டாலும் பதில் சொல்ற செல்வி.

... .. ....

எப்படிற இருக்க என் கண்ணு.. சொல்லிட்டே கண்ணத்தை தடவி முத்தம் கொடுத்து.. ரெண்டு கையால  முகத்த பிடிச்சுட்டே "எப்படி ரா இருக்க" ங்குறத இன்னுமொரு இருவது வருஷதுக்கும் சேர்த்து கேட்டுட்டாங்க..

நலம் விசாரிப்பு முடிஞ்சு வீட்டுக்கு கிளம்பி வந்தேன்..

.. .. ...

பூட்டு திறக்கும்போது கவனித்தேன்..  
அவ்வளவையும் நினைவு படுத்த முடியாத நிலையில் அந்த நயந்த ஒரு காது அறுந்த பால் பை..

0 comments: